Monday, October 3, 2011

விண்டோஸ்7ல் Shell கிளாசிக் மெனு


விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமானது, பல்வேறு புதிய பரிமானங்களுடன் வெளிவந்துள்ள விண்டோசின் புதிய பதிப்பாகும். இதில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட செயல்கள் பல அடங்கும். குறிப்பாக முந்தைய பதிப்புகளை விட பல புதிய அம்சங்கள் இந்த பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது, முன்பெல்லாம் Start சென்று புரோகிராம்ஸ் வழியாக பயன்பாடுகளை திறப்போம். அதே போல் தான் இந்த புதிய பதிப்பிலும் ஆனால் ஒரு சிறிய மாற்றம் இவையனைத்தும் ஒன்றன் கீழ் ஒன்றாக மட்டுமே தெரியும். இதனால் ஒரு சில கணினி பயனாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக புதியவர்களுக்கு இந்த மெனுக்கள் தொந்தரவாக இருக்கும். முன்பு பயன்படுத்திய விண்டோஸ் எக்ஸ்பியில் பனியாற்றிய கணினி பயனாளர்களுக்கு இந்த புதிய மெனுக்கள் ஒரு சோம்பலை உண்டாக்கியது. நணபர் ஒருவர் நேற்று மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விண்டோஸ் எக்ஸ்பில் போல கிளாசிக் மெனுக்களை விண்டோஸ் 7ல் வரவைக்க முடியுமா என்று வினவினார். இதோ அவருக்கான பதில் கீழே.

மென்பொருளை தரவிறக்க சுட்டி





இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் நீங்கள் உங்களுடைய விண்டோஸ்7 நிறுவப்பட்ட கணினியில் கிளாசிக் மெனுவை காண முடியும்.




இந்த கிளாசிக் மெனு வேண்டாம் என்றால், Shift பொத்தானை அழுத்தியவாறு START ஐகானை கிளிக் செய்யவும். தற்போது மீண்டும் பழைய மெனுவை காண முடியும். மேலும் விண்டோஸ் எக்ஸ்புளோரரிலும் பழைய வசதிகளை மீண்டும் பெற முடியும்.



இந்த மென்பொருளில் மேலும் பல்வேறு வசதிகள் உள்ளன, கட், காப்பி, பேஸ்ட் போன்ற ஐகான்களையும் பெற முடியும். இந்த கட், காப்பி, பேஸ்ட் போன்ற ஐகான்கள் விண்டோஸ் 7ல் தெரியவில்லை, ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் தெரிகிறது. நாம் விண்டோஸ் எக்ஸ்பியில் பணியாற்றும் சூழ்நிலையை விண்டோஸ் 7லும் பெற முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ்7 32பிட், 64பிட் இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.


இந்த மென்பொருளானது மிகவும் புதுமையாகவும், பயனுள்ளதாகவும் அமையும், ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு கூறுங்கள்.


கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive


நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம்முடைய கணினியானது செயல் இழக்க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நேரிடும் அந்த நிலையில் நம்முடைய வன்தட்டில் உள்ள தகவல்களை பேக்அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நிலையில் நாம் நமக்கு வேண்டிய பைல்களை தனியே தேர்வு செய்து சிடி/டிவீடி அல்லது ப்ளாஷ் ட்ரைவ்களில் பேக்அப் செய்து கொள்வோம். அவ்வாறு இல்லாமல் வன்தட்டில் குறிப்பிட்ட பார்ட்டிசியனை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் பேக்அப் செய்து கொள்ள முடியும் வேண்டுமெனில் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி




இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், நிறுவும்போது கீ கேட்டும் அப்போது முந்தைய அப்ஷனை தேர்வு செய்து GetProductkey என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து ரிஜிஸ்டர் செய்தபின் உங்களுக்கான கீயானது உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும், பின் நீங்கள் முழுமையாக இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.

மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் பார்ட்டிசியனை பார்மெட் மற்றும் டெலிட் செய்து கொள்ளவும் முடியும். வேண்டுமெனில் பார்ட்டிசியன்களை மறைத்து வைத்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளானது NTFS (v1.2, v3.0, v3.1), FAT16, FAT32, Linux Ext2FS, Linux Ext3FS, Linux Swap, HPFS ஆகிய பைல் சிஸ்ட்டங்களை சப்போர்ட் செய்யும். 

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமான Xp,Vista,7 போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். பேக்அப் செய்ய கூடிய டேட்டாவினை ப்ளாஷ் ட்ரைவில் தொடங்கி சிடி/டிவிடிக்களில் பதிவு செய்துகொள்ள முடியும். இந்த மென்பொருள் USB 2.0 வினை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

டேட்டாவினை பேக்அப் செய்ய முதலில் Backup என்னும் பட்டியை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும், பின் எந்த ட்ரைவ் என்பதை தேர்வு செய்யவும், பின் டேட்டாவினை எந்த ட்ரைவில் பதிய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும், அடுத்ததாக Finish என்ற பட்டனை அழுத்தவும். கடைசியாக Apply பட்டனை அழுத்தவும். தற்போது பேக்அப் ப்ராசஸ் நடைபெறும் , சிறிது நேரத்தில் முற்றுபெறும். பின் நீங்கள் பேக்அப் செய்த டேட்டாவினை தனியே சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதே போல்தான் ரீஸ்டோரும் செய்ய வேண்டும்.


ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய


விண்டோஸ் இமேஜ் பைல் பார்மெட்டில் குறிப்பிடதக்கது  ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும்.  இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ஐஎஸ் பைல்களை பூட்டபிள் பைலாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண பைல்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு,  ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட பைலை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்


குறிப்பிட்ட சில மணி நேரங்களில் பைலானது கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள்  சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும்.  இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.